தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
சுற்றுலாத்தலம்மிக்க இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வருகை தந்து குளித்துவிட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வர தொடங்கியது இதனை அடுத்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் அருவிக்கு நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதித்த நிலையில் நேற்று நீர்வரத்து சற்று குறைந்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று அனுமதித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று மீண்டும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இதனால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.