• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தி நியூ யார்க் டைம்ஸின் சிறந்த 5 சர்வதேச படங்கள் – பட்டியலில் கர்ணன்

Byமதி

Sep 29, 2021

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனைகளையும் வரவேற்பையும் பெற்றது.

கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக அரசியல்வாதிகளே பாராட்டினார்கள். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து அமேசான் பிரைமில் ’கர்ணன்’ வெளியானது.

கொரோனா சூழலில் தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் பார்த்து ரசித்தனர். அந்தளவிற்கு, ‘கர்ணன்’ படம் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்மிக்க தி நியூயார்க் டைம்ஸ் ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேசப் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், கர்ணன் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ‘The Father Who Moves Mountains’, ‘Koshien: Japan’s Field of Dreams’, ‘I Never Climbed the Provincia’, ‘The Cloud in Her Room’ஆகியவை மற்ற நான்கு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.