- 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.
- இந்திய விண்வெளி சங்கத்தை (ISpA) நாளை மறுதினம் காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
- தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆந்திர அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, போதிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும், டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் சென்ற பெண் குழந்தையை, பட்டுக்கோட்டையில் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
- ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
- இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம் சரண் இணையும் ’ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு வரும் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
- சூரியாவின் 2d என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.