மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக கல்லறை திருவிழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மதுரை உயர்மாவட்டம் சமயநல்லூர் பங்கு சோழவந்தான் கிளை கிராமம் சோழவந்தான் காவல் நிலையம் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருவிழா நிகழ்வானது நடைபெற்றது. இங்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். இந்த நிகழ்வானது இறந்த தங்கள் முன்னோர்கள் கிறிஸ்துவுக்குள் உயிர் பெற்று எழுந்திருக்கிறார்கள் என்று நம்புவதாக கூறும் நிகழ்வாக நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை சமயநல்லூர் பாதர் மார்ட்டின் ஜோசப் கூறுகையில்..,
நவம்பர் 2 உலகெங்கிளும் கல்லறை திருநாள் அல்லது கிறிஸ்துவுக்குள் இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் நினைவு கூறக்கூடிய விழாவாக கொண்டாடுகிறார்கள் அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இருக்கக்கூடிய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்ட திருவிழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். தங்களது குடும்பங்களில் இருந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை மாலைகளால் அலங்கரித்து மலர்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மிக சிறப்பான முறையில் இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விழாவை கொண்டாடுவதன் நோக்கம் இறந்த கிறிஸ்தவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் இறந்த முன்னோர்கள் கிறிஸ்துவுக்குள் உயிர் பெற்று எழுந்திருக்கிறார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் முன்னோர்களை நினைவு கூறுவதன் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கக் கூடிய படிப்பினைகளை நினைவு கூறவும் அவர்கள் வாழ்க்கையில் செய்த பல்வேறு தவறுகளை கலைந்து புதிய முறையில் வாழ வேண்டும் என்பதற்காக கிறிஸ்துவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு கூறினார். இங்கு நடைபெற்ற கல்லறை தோட்ட நிகழ்வில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மாலைகளால் அலங்கரித்து வழிபட்டுச் சென்றனர்.