• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை

Byகாயத்ரி

Dec 8, 2021

வங்கக் கடலில் உருவான அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல், வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது.
இதனால் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது.

ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மேலும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில், கேரளாவிலும் மழை காரணமாக காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவுக்கு அதிக அளவிலான தக்காளி ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.