மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் இரும்பாடி சின்ன இரும்பாடி மற்றும் அருகில் உள்ள கிராம பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியின் மாணவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் சிறந்த மாணவர்களாக செயல்பட்டு பரிசுகளையும் வென்றுள்ளனர். ஆனால் இந்த பள்ளிக்கூடத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதி மிக மோசமாகவே உள்ளது. திறமையான மாணவர்கள் உள்ள இந்த பள்ளியின் கழிப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து சேதமடைந்து உயிர் பலி வாங்க கூடிய அளவில் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சமடைந்து இருப்பதாக கூறுகின்றனர்
இது குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை பெற்றோர் தரப்பில் எடுத்துச் சென்ற பின்பும் புதிய கழிப்பறை கட்டித்தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது நினைவிருக்கலாம்
ஆகையால் மேலும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க உடனடியாக இரும்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் மீதி இருக்கும் கழிப்பறை கட்டிடம் இடிந்து விழக்கூடிய நிலைமையில் உள்ளது

10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் கழிவறையை பயன்படுத்தக்கூடிய நிலையில் விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது
ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் பள்ளியை ஆய்வு செய்து சேதம் அடைந்த கழிப்பறை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்




