• Thu. Apr 24th, 2025

கொரானா பெருந்தொற்று காலம் துவங்கப்பட்டு இன்றுடன் 5 ம் ஆண்டு அன்னதான நிகழ்வு..,

வேளாங்கண்ணியில் கொரோனா பெருந் தொற்று காலத்தில் துவங்கப்பட்டு இன்றுடன் 5 வருடங்களாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பகுதிகளில் உதவிக் கரங்கள் சார்பில் வேளாங்கண்ணி பேராலய பகுதிகளை சுற்றியுள்ள ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் மனநிலை பாதிக்கப்பட்டோர் ,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 2020 ஆண்டு தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி,முட்டை, வெங்காயதாளிச்சா,தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.