• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வருமான வரி தாக்கல் செய்ய இன்று ஒரு நாள் கால அவகாசம்

Byவிஷா

Sep 16, 2025

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒரு நாள் செப்டம்பர் 16ம் தேதி செவ்வாய் கிழமை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ம் தேதி தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக கருதப்படுகிறது. நடப்பாண்டை பொறுத்தவரை ஐ.டி.ஆர். படிவத்தில் சில மாற்றங்கள் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 15ம் தேதி நேற்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. வழக்கத்தை விட சம்பளதாரர்களுக்கு இந்த முறை 45 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து வருமானவரித்துறை ‘கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வந்தது. கடைசி நாளான நேற்று நள்ளிரவு வரை சம்பளத்தாரர்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த வருமான வரித்துறை இதற்கான தேதி எதையும் தற்போது வரை நீட்டிக்கவில்லை, போலி செய்திகளை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். உடனடியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்’ என பதிவிட்டிருந்தது.
வருமானவரி கணக்கு இன்று (நேற்று) தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டப்பிரிவு 234 எப்-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வந்தால், ரூ.5000 அபராதமும், ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டியிருந்தால் ரூ1000அபராதத் தொகையும் விதிக்கப்படும். கடைசி தேதிக்குப் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். டிசம்பர் 31ம் தேதி வரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது.
தனிநபராக வரி செலுத்துபவர்கள் தணிக்கை தேவையில்லாத இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் நிதி சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது ரீபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட கேரி-பார்வர்டு சலுகைகளையும் இழக்க நேரிடும். இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒரு நாள் செப்டம்பர் 16ம் தேதி செவ்வாய் கிழமை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.