• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா!!

Byகாயத்ரி

Aug 9, 2022

மாமல்லபுரத்தில் நடந்துவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29 முதல் நடந்துவருகிறது. பிரம்மாண்டமாக தொடங்கிய இதன் துவக்க விழா பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இன்றுடன் போட்டிகள் முடிவடையும் நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிறைவு விழா நடக்க இருக்கிறது. தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவிலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 9) மாலை 6 மணிக்கு நிறைவு விழா தொடங்குகிறது. நிறைவு விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று செஸ் ஒலிம்பியாடில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்குகிறார். நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி, துணைத்தலைவரும் 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், செஸ் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.