ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் மே 20, 1871ல் பெல்ஜியத்திலுள்ள கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார். மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம் அடிப்படையில் பிரித்தானியராகக் கருதப்பட்டார். அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (குறைந்தது ஆறுபேர்) அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். வாஷிங்டன் ஜெர்மனியின் பிரஸ்ஸல்சுக்குச் சென்று வசித்தார். அங்கு அவர் இரசாயனவியல் பட்ட படிப்பை ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவர் டிசம்பர் மாதம் 1895 ஆண்டு ஏஞ்சலின் செலின் விர்கினியை திருமணம் செய்தார். அவரது மனைவியும் பெல்ஜியத்தில் பிறந்தவராவார். அக்டோபர் 6, 1896 அன்று வாஷிங்டன் கப்பலில் அமெரிக்காவுக்கு ஆண்ட்வெர்ப் பெல்ஜியத்திற்கு வருகை தந்ததாக எல்லிஸ் தீவில் பதிவு செய்யப்பட்டது என்றாலும், 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, அவர்கள் 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்கள் என்று கூறுகிறது. வாஷிங்டன் மற்றும் அவரது மனைவியும் தங்களது மூன்று குழந்தைகளுடன் நியூயார்க் பகுதியில் குடியேறினர்.

வாஷிங்டன் நியூயார்க் பகுதிக்கு வந்த பின்னர் மண்ணெண்ணெய் எரிவாயு சுடர்வலை உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இந்த நேரத்தில், அவர்கள் ஸ்டேட்டன் தீவின் நியூ பிரைட்டனில் வசித்தார். ஆனால் அவரது நிறுவனமான ஜார்ஜ் வாஷிங்டன் விளக்கு நிறுவனம், அருகில் உள்ள ஜெர்ஸி சிட்டியை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த வணிகமானது வெள்ளொளிர்வு விளக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கைவிடப்பட்டது. ஒரு நேரத்தில் வாஷிங்டனிடம் நிழற்படக் கருவி நிறுவனம் இருந்தது. 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, 29 வயதாகிய வாஷிங்டன் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும் அவருடன் அவரது 23 வயதாகிய மனைவி, மூன்று குழந்தைகள், 25 வயதாகிய அவரது இளைய சகோதரி, மூன்று வேலையாட்கள் மற்றும் இரண்டு வேலையாட்களின் ஒரு குழந்தை ஆகியோர் புரூக்ளினில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக பதிவு செய்திருந்தது. வாஷிங்டன் 1906, 1907 ஆம் ஆண்டு குவாத்தமாலாவில் கால்நடை பண்ணை வைப்பதற்கு முயற்சி செய்தார். இதற்கிடையில், அவரது உடனடி காபி உற்பத்தி முயற்சியையும் மேம்படுத்தினார். வாஷிங்டன் ஓராண்டு காலம் குவாதமாலாவில் இருந்த பின் நியூயார்க் நகரம் திரும்பி காபி உற்பத்தியை முக்கிய தொழிலாகத் தொடங்கினார்.
வாஷிங்டன் 1927 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் நிலம் வாங்கி அங்கு தனது நிறுவனத்தை இடமாற்றினார். மற்றும் அவர் மேந்தமிலுள்ள “ஃபிராக்ளின் பண்ணைத் தோட்டத்துக்கு” குடிபெயர்ந்தார். வாஷிங்டன் விலங்குப் பிரியரும் தோட்டப் பிரியருமாவார். தனது கிராமப்புற இடங்களில் (முதலில் பெல்போர்ட்டிலும் பிறகு மேந்தமிலும்) விலங்குக் காட்சிசாலைகளை அமைத்துப் பராமரித்தார். லாங் தீவில், அடிக்கடி தனது தோளில் ஒரு பறவை அல்லது குரங்குடன் அவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாஷிங்டன், அவரது விலங்குக் காட்சியங்களில், அரியவகைப் பறவைகளை பராமரித்து வந்தார். மேலும் மான், செம்மறி, வெள்ளாடுகள், மற்றும் மறிமான் போன்ற விலங்குகள் பெல்போர்ட்டிலும். மேந்தமிலில் பெரிய இடத்தில் நூற்றுக்கணக்கான மான், லாமாக்கள் மற்றும் வரிக்குதிரைகளும் வளர்க்கப்பட்டன. சமூகளவில், அவர் நியூயார்க் நகரின் லோட்டோஸ் சங்க (Lotos Club) உறுப்பினராக இருந்தார். 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், “அமெரிக்க கட்சி” சார்பில் டகோட்டா மாகாணத்தின் வேட்பாளராக வாஷிங்டனை முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டதாகவும் ஆனால் ஆவணங்கள் மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் அவர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஜார்ஜ் வாஷிங்டன் வெளிநாட்டில் பிறந்தமையால் ஜனாதிபதி வேட்பாளராகத் தகுதி கிடையாது.

ஜார்ஜ் வாஷிங்டன் ஹைட்ரோகார்பன் விளக்குகள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் காப்புரிமைகள் வைத்திருந்தார். உடனடி காபி செயல்முறையை முதலில் கண்டுபிடித்தவர் வாஷிங்டன் இல்லை. உடனடி காபி செயல்முறைகளில் சடோரி கரோவினுடைய செயல்முறை ஒரு முன்னோடியாக இருந்தது. எனினும் வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது. அவர் ஒரு வெள்ளி காபி பாத்திரத்தின் விளிம்பில் உலர்ந்த தூளைப் பார்த்து வாஷிங்டன் உந்துதல் அடைந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதே சமயத்தில் ஒரு ஜெர்மன்- குவாத்திமாலனியரான, ஃபெடரிகோ லேஹ்ன்ஹோப்ப்வயலட் (Federico Lehnhoff Wyld) என்பவரால் உடனடி காபி செய்முறை உருவாக்கப்பட்டது. அது ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்பட்டது. வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு Red E Coffee (“ready” -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம் 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 147, 41வது தெரு, புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927ல் 45, கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.
நிறுவனத்தின் தயாரிப்பு, பயன்படுத்தும் வசதி, நவீன மாற்றம் மற்றும் தூய்மை என்பன விளம்பரம் மூலம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. காபி சமிபாட்டுக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. முதலாம் உலக போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க இராணுவம் காபியை பாவிக்கத் தொடங்கியதால் விற்பனை பெருகியது. இந்த நிறுவனம் 1930லிருந்து 1935 வரை “செர்லக் ஓம்சு” வானொலி தொடரை வழங்கிய பின் இதன் விற்பனை வளர்ச்சி மேலும் பெருகியது. ஆனால் ஆரம்ப உடனடி காபியானது பெரும்பாலும் தரமற்ற, சுவையற்ற, சற்றே புதுமையான தயாரிப்பாகக் கருதப்பட்டது. மத்திய அதிகாரிகளினால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையேயான நிதியுறவு தொடர்பாக வரி சிக்கல்களுக்கு ஆளானார். நவம்பர் 1918ல், தனது வர்த்தக ரகசியங்களை காபி உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் ஒன்றை நிறுவனத்தில் முன்வைத்தார் மற்றும் ஒரு மாதம் கழித்து 4/5 பங்குகளை அவரது குடும்பத்தினருக்கு கொடுத்தார். வாஷிங்டன் குடும்பத்தினர் குடும்ப வருமானத்தின்மீது வரிகட்டத் தேவையில்லை என்று வலியுறுத்தினர். இந்த வழக்கின் பலகட்டங்களிலும் இவர்களுக்கு எதிரான தீர்ப்பே கிட்டியது. வாஷிங்டன் மகன் தந்தையின் நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றினார். தந்தையைப் போல் கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் போன்றவற்றில் ஈடுபட்டார்.

முதலாம் உலக போரில் வாஷிங்டனின் அந்த நேர தயாரிப்பான உடனடி காபி உணவிற்கு முக்கிய பயன்பாடாக இருந்தது. காபியின் நுகர்வானது இராணுவ வீரர்களுக்கு காபின் ஊக்கத்தை கொடுத்தமையால் போர்க்களத்தில் பெறுமதிமிக்கதாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில், அமெரிக்கப் போர் துறையில், காபி பிரிவின் தலைவராக இருந்த இ.எஃப்.ஹோல்புரோக், கடுகு வாயுவிலிருந்து மீட்படைவதற்கு காபி முக்கிய உதவியாக உள்ளதாகக் கருதினார். 1914ல் கனடிய படையால் இது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1917ல் அமெரிக்கப் படை போரில் நுழைந்த பின் அமெரிக்க இராணுவப் பயன்பாட்டிற்காக எல்லா உற்பத்தியும் கொடுக்கப்பட்டது. தேசிய உற்பத்தி விநியோகமானது ஆறு முறை யுத்தத்தின் இறுதி காலத்திலிருந்தது மற்றும் புதிய சிறிய தயாரிப்பாளர்கள் கூட நம்பமுடியாத அளவு தேவைக்கு இராணுவத்தை சந்திக்க வேண்டியிருந்தது. “ஜார்ஜ் கப்” என்ற புனைப் பெயருடன் உடனடி காபி இராணுவத்தினர் மத்தியில் புகழ் பெற்றது. காபியானது அதன் மணத்தைவிட, காஃபின் ஊக்கத்தினால் பிரதான ஈர்ப்பாக இருந்தது, அது சில நேரங்களில் குளிர்நிலையிலும் அருந்தப்பட்டது.
எலிகள், மழை, மண், வரைவுகள் [sic], பீரங்கி கர்ஜனை, மற்றும் குண்டுகள் அலறல் போன்றன இருந்த போதிலும் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். சிறிய எண்ணெய் சூடாக்கியை ஒளி ஏற்றுவதற்கும் ஜார்ஜ் வாஷிங்டனின் காபி செய்வதற்கும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். ஒவ்வொரு இரவும், நான் வாஷிங்டனின் சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் விசேட மனு ஒன்றை வழங்குகின்றேன்.” — அமெரிக்க படையினர், 1918 அகழிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதம். முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் அவசரகால பங்கீடாக ஒரு கால் அவுன்சு (7 கிராம்) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட் ஒரு நபருக்கு ஒன்றாக, இருபத்தி நான்கு பேருக்கான அளவில் வெவ்வேறு உணவுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தன. உடனடி காபியானது சேமிக்கப்பட்ட இருப்புகளிலும் மற்றும் அகழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக போரின் போதும் அமெரிக்க இராணுவம் மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தது. எனினும் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல உடனடி காபி வகைகள் (மிக குறிப்பாக நெஸ்கபே) சந்தையில் அறிமுகமாயிருந்தன. அவை அதிகரித்த இராணுவ தேவையைப் பூர்த்தி செய்தன.
1943 ஆம் ஆண்டு ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனமானது அமெரிக்க வீட்டு தயாரிப்பு உற்பத்தி மூலதனமாக வாங்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெற்றார். வாங்கப்பட்ட நிறுவனமானது பெரும்பாலும் குடும்பத்தால் நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்க வீட்டு தயாரிப்பின் 29,860 பங்குகளுக்காக (அண்ணளவாக $ 1.7 மில்லியன்) இது மாற்றப்பட்டது. ஒரு நேரத்தில் அமெரிக்க வீட்டு தயாரிப்புகள் தீவிர கொள்முதலாகவும், எட்டு வருடமாக 34 பங்குகளை நிறுவனங்கள் வாங்குவதாகவும் இருந்தது. ஜி.வாஷிங்டனின் பொது முகாமையாளர் கிளாரன்ஸ் மார்க், வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட அலகில் இயங்கி வெற்றி கண்டார். வாஷிங்டனுடைய இறுதிக் காலங்களில், அவர் “பிராங்கிளின் பண்ணைத் தோட்டம்” சொத்தை விற்பனை செய்துவிட்டு புதிய வெர்னான் சாலை, மேந்தமிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது நிறுவனம் விற்பனை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மார்ச் 29, 1946 ஆம் ஆண்டு, தனது 74 ஆவது வயதில் நியூ செர்சியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
வாஷிங்டனின் நியூ ஜெர்சி உற்பத்திநிலையம் கோ-கோலா நிறுவனத்தின் பிரிவான தென்கோவிற்கு விற்கப்பட்டதிலிருந்து. வாஷிங்டனின் காபி உற்பத்தியானது 1961ல் கைவிடப்பட்டது. 1938ல் தொடங்கப்பட்ட ’G. Washington’s Seasoning & Broth’ நிறுவனம் வாஷிங்டனின் இறுதிச் சொத்தாக இருந்தது. இதன் உற்பத்தி 2000 ஆம் ஆண்டு அமெரிக்க வீட்டு தயாரிப்பு நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இரு நிறுவனங்களிடம் கைமாறிய பின் 2001 ஆம் ஆண்டு ஹோம்ஸ்டேட் ஃபார்ம் லிமிட்டடு ஆல் நடத்தப்பட்டது. வாஷிங்டனின் பெயர் இன்னும் G. Washington’s Seasoning & Broth என்ற பெயரில் விளங்குகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]