
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கான 3வது நாள் முன்னோட்டம் இன்று நடைபெறுகிறது.இந்த ஆண்டு குடியரசு தினத்தில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முப்படை சாதனைகளை வெளிப்படுத்தும் ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகிறது. ஆண்டுதோறும் ஒரு மணி நேரம் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சி, இந்த முறை 35 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக தகவல். வெளியாகியுள்ளது.