• Sun. Apr 28th, 2024

பரிதிமாற்கலைஞர் பிறந்த தினம் இன்று:

ByKalamegam Viswanathan

Jul 6, 2023

மதுரை மாவட்டம், செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,
தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 06.07.1870-அன்று பிறந்தார். இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்தவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டபோது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர் தமது 33-ஆம் வயதில் 1903-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என, நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக , மதுரை மாவட்டம், விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான ஜலை 6-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் சாலினி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி , சேடப்பட்டி மு.மணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *