வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744).
ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத் தோட்ட வளாகம் ஓகென் எனப்படும் தோமாவில் இருந்தது. செல்சியஸ் என்ற இவரது பெயர் செல்சஸ்(celsus) என்ற குடும்பத் தோட்ட வளாகப் பெயரின் இலத்தீன வடிவமாகும். இவரது ஒரு தாத்தா மேக்னஸ் செல்சியஸ் ஒரு கணிதவியலாளராவார். மற்றொரு தாத்தாவான ஆண்டெர்ஸ் போல் ஒரு வானியலாளராவார். எனவே இவர் வாழ்க்கைப்பணியாக அறிவியலைத் தேர்ந்தெடுத்தார். இளமையில் இருந்தே இவர் கணிதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். இவர் அவரது தந்தை வானியல் பேராசிரியராக இருந்த உப்சாலா பல்கலைக்கழகத்தில் படித்தார். 1730ஆம் ஆண்டில் தன் 30ஆம் அகவையில் உப்சலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1730ஆம் ஆண்டில், செல்சியஸ் புவியில் இருந்து சூரியனுக்குள்ள தொலைவை அளப்பதற்கான புதியமுறை எனும் ஆய்வுரையை வெளியிட்டார். இவர் புவிமுனைச் சுடர்வு நிகழ்வுகளையும் ஃஇயார்டெர் என்பவருடன் இணைந்து ஆய்வு செய்தார். வடமுனைச் சுடர்வுக்கும் புவிக் காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள உறவை முதலில் முன்மொழிந்தவர். வலிமைமிக்க சுடர்வுச் செயல்பாட்டின்போது காந்த ஊசிகள் பேரளவில் விலக்கம் உறுவதைக் கண்டார். நியூரம்பர்கில் 1733ல் வடமுனைச் சுடர்வு பற்றி 1716-1732 கால அளவில் தானும் பிறரும் பதிவு செய்த 316 நோக்கீடுகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டார். செல்சியஸ் 1730களில் தொடக்கத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்சு என பல்வேறு ஐரோப்பியாவில் உள்ள மாபெரும் வான்காணகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துள்ளார்.

பாரீசில் வரலாற்றுப் புகழ்பெற்ற இலெபொனியாவில் கிடைவரையின் வில்லை அளக்கும் வழிமுறையை முன்மொழிந்துள்ளார். 1736ல் இதற்காக ஃபிரான்சு அறிவியல் கல்விக்கழகத்தால் ஃபிரெஞ்சு கணிதவியலாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கிடைவரை அளவீட்டுத் தேட்டத் திட்டத்தில் பங்கேற்றார். இந்த திட்டத்தின் நோக்கம் புவிமுனையில் ஒரு பாகை கிடைவரைத் தொலைவையும் பிறகு இன்றைய ஈக்வடாரில் உள்ள பெருவில் அதாவது புவி நடுவரையில் ஒரு பாகை கிடைவரைத் தொலைவையும் அளந்து ஒப்பிடுவதாகும். இத்தேட்டம் ஐசக் நியூட்டன் நம்பியதைப் போல, புவி தன்முனைகளில் தட்டையாக உள்ள நீள்வட்ட வடிவத்தில் உள்ளது என்பதை நிறுவியது.
1738ல் புவியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான நோக்கீடுகள் என்ற நூலை வெளியிட்டார். இலாப்லாந்து புவித்தேட்டத்தில் செல்சியஸ் கலந்துக் கொண்டது சுவீடனில் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்த்து.சுவீடன் அரசாலும் ஒருசாலை ஆய்வாளர்களாலும் பெரிதும் மதிக்கப்படலானார். இதைப் பயன்படுத்தித் தன் செல்வாக்கினால் புதிய வான்காணகத்தை உப்சாலாவில் உருவாக்குவதற்கான பெரும்பொருளைத் திரட்டினார். இவர் உப்சாலாவில் உப்சாலா வானியல் நோக்கீட்டகத்தை வெற்றியுடன் நிறுவினார். அந்த வான்காணகத்தில் தன் ஐரோப்பியப் பயணத்தில் அரும்பாடுபட்டுத் திரட்டிய புத்தம்புது தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட வான்நோக்கீட்டுக் கருவிகளை அமைத்தார்.

வானியலில் செல்சியஸ் சில விண்மீன்களின் பொலிவை அளக்க வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வான்நோக்கீடுகளைச் செய்யலானார். இதுதான் முதன்முதலான கருவிவழிப் பொலிவு அளவீடுகளாகும்.அதுவரை விண்மீன் பொலிவு வெற்றுக்கண்ணால்தான் மதிப்பிடப்பட்டு வந்தது. இவர் ஒளிமறைப்புகல், பல்வேறு வான்பொருட்கள் தொடர்பான நொக்கீடுகளைச் செய்தார். ஏறத்தாழ 300 விண்மீன்களின் பொலிவுப் பருமைகளைத் தன் ஓளியளவு முறைப்படி அளந்து வெளியிட்டார். அறிவியலாக பன்னாட்டு வெப்பநிலை அளவை வரையறுக்க, பல செய்முறைகளைச் செய்து செல்சியஸ் அளவுகோலை முதன்முதலில் உருவாக்கியவர் இவர்தான். இவர் “இரு நிலையான பாகைகள் பற்றிய வெப்பநிலை” என்ற தன் சுவீடிய ஆய்வுரையில், உறைநிலை பற்றிய ஆய்வு உறைநிலை கிடைவரையைப் பொறுத்தும் (வளிமண்டல அழுத்த்த்தைப் பொறுத்தும்) மாறுவதில்லை என்று அறிவிக்கிறார். ஆனால் தண்ணீரின் கொதிநிலை வளிமண்டல அழுத்தத்தைப் பொறுத்து மாறுவதைக் கூறுகிறர்.
அவரது அளவீடுகள் மிகத் துல்லியமாக உள்ளன. செந்தர அழுத்த்த்தில் இருந்து வளிமண்டல அழுத்த அளவு மாறும்போதும் கொதிநிலையைக் கண்டறியும் விதியையும் தந்துள்ளார். 1710லேயே நிறுவப்பட்ட மிகப்பழைய உப்சாலாவில் இருந்த அரசு அறிவியல் கழகத்துக்கு ஓர் ஆய்வுரைவழியாக செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலை 1742ல் அறிவித்தார். இவரது வெப்பநிலையளவி உறைநிலையை 100 பாகையாகவும் கொதிநிலையை 0 பாகையாகவும் கொண்டிருந்தது. செல்சியசின் இறப்பிற்குப் பிறகு, 1745ல் கார்ள் இலின்னேயசு நடைமுறையில் அளத்தலை எளிதாக்க இதை தலைக்கீழாக மாற்றியமைத்தார். செல்சியஸ் முதலில் தன் வெப்பநிலை அளவுகோலை நூறு படிகள் எனப் பொருள்படும் இலத்தீனச் சொல்லாலேயே அழைத்தார். பல ஆண்டுகட்கு இது சுவீடிய வெப்பநிலையளவி என்றே வழங்கப்பட்டது. இவரது மாணவரான மார்ட்டின் சுற்றோமர் (Martin Stromer) எட்டாண்டுகள் கழித்து இம்முறையைப் பின்பற்றும் வெப்பநிலைமானியை உருவாக்கினார். இது ஐரோப்பாவில் செல்சியஸ் என்ற பெயரிலும் இங்கிலாந்தில் செண்ட்டிகிரேடு என்ற பெயரிலும் முன்பு வழங்கப்பட்டது. இதனையொட்டியே இந்த அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

செல்சியஸ் 1725ல் உப்சாலா அரசு அறிவியல் கழகத்தின் செயலாளரானார். அவர் 1744 வரை அப்பதவியில் இருந்தார். இலின்னேயசும் வேறு ஐவரும் 1739ல் சுட்டாக்ஃஓல்மில் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழக்த்தை நிறுவ முயன்றபோது அதற்குத் தன் முழு ஆதரவையும் தந்தார். இவர் அதன் முதல் கூட்டத்தில் அதன் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் இந்தப் புதிய கல்விக்கழகத்துக்குப் பெயர் சூட்டியதே செல்சியஸ் தான். செல்சியஸ் அளவுகோலை நிறுவிய ஆன்டர்ஸ் செல்சியஸ் ஏப்ரல் 25, 1744ல் தனது 42வது அகவையில் உப்சாலா, சுவீடனில் எலும்புருக்கி நொயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]
- ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மதுரையில் மவுன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனைமதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து காஞ்சி மகா பெரியவர் […]
- இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த […]
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]