1509 : கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக சித்தூரில் முடிசூடினார்.
1605 : பின்லேந்தின் உலேஸ்போர்க் நகரம் ஸ்வீடனின் நான்காம் சார்லஸால் நிறுவப்பட்டது.
1848 : இலங்கையில் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டார்.
1876 : தாமஸ் ஆல்வா எடிசன் தனது மைமோ கிராஃபிற்கான காப்புரிமையைப் பெற்றார்.
1908 : வில்பர் ரைட் தனது முதலாவது வான் பயணத்தை பிரான்ஸின் லு மான்ஸ் என்ற இடத்தில் மேற்கொண்டார்.
இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும்.
1929 : கிராஃப் செப்பலின் என்ற ஜெர்மனி போர்க்கப்பல் உலகைச் சுற்றும் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.
1942 : இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1943 : இந்திய தேசியப் படையின் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்.
1947 : பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1956 : பெல்ஜியத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர்.
1963 : இங்கிலாந்தில் இடம்பெற்ற ரயில் கொள்ளையில் 15 பேர் அடங்கிய கொள்ளையர் குழு 25 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங்கை கொள்ளை அடித்தன.
1967 : தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் தாய்லாந்து ஆகியன இணைந்து உருவாக்கப்பட்டது.
1974 : வாட்டர்கேட் ஊழல் :- அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி நாளை தனது பதவியைத் துறக்க இருப்பதாக அறிவித்தார்.
1988 : மியான்மர், ரங்கூன் நகரில் மக்களாட்சியை வலியுறுத்தி கிளர்ச்சி நடந்தது.
செப்டம்பர் 18 ல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
சீனாவில் செசியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் சூறாவளிக் காரணமாக நூறு பேர் உயிரிழந்தனர்.
80 பேர் காணாமல் போயினர்.
1989 : ரகசிய ராணுவ விண்வெளி திட்டத்தை முன்னெடுத்து
நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 : ஈராக் குவைத்தைக் கைப்பற்றி அதனை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1991 : அக்காலத்தில் மிக உயர்ந்த வார்சா வானொலி தொலைத் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்தது.
1993 : குவாமில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
71 பேர் காயமடைந்தனர்.
1998 : ஆப்கானிஸ்தான் மசான் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகத்தை தலிபான்களால் தாக்கப்பட்டதில் 10 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர்.
2000 : அமெரிக்க உள்நாட்டுப் போரில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2008 : 29 வது ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டன.
2010 : சீனாவில் கான்சு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர்.
2013 : பாகிஸ்தான், குவெட்டாவில் நடந்த இறுதி சடங்கில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர்.
2016 : பாகிஸ்தான், குவெட்டாவில் அரசு மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தற்கொலை குண்டு வெடிப்பு, மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 94 பேர் வரை கொல்லப்பட்டனர்.
130 பேர் காயமடைந்தனர்.