• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் இன்று 60சதவீத பேருந்துகள் இயக்கம்..!

ByP.Thangapandi

Jan 10, 2024

உசிலம்பட்டியில் இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன – பெரும்பாலான பேருந்துகளை தற்காலிக பேருந்து ஓட்டுநர்களே இயக்கி வருகின்றனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்க ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இந்நிலையில் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில் 68 பேருந்துகள் தினசரி இயக்கப்படும் நிலையில் இன்று சுமார் 45 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளனர்., பெரும்பாலான பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இன்று இயக்கி வருகின்றனர்.
இதே போன்று செக்காணூரணி போக்குவரத்து பணிமனையில் உள்ள 48 பேருந்துகளில் தினசரி 40 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 38 பேருந்துகள் தொ.மு.ச ஓட்டுநர், நடத்துனர்களால் இயக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு கருதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு 20க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.