நுகர்பொருள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மற்றும் வெம்பக்கோட்டை போலீசார் மேலத்தாயில்பட்டி, கோட்டையூர், மடத்துப்பட்டி ,தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் பாக்கெட் உணவுகள் காலாவதியாகி விட்டதா எனவும்,தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

அப்போது தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள ராஜா (வயது 55) என்பவரது டீக்கடையில் சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. உடனடியாக புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தனர்.