• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் லட்சியம் வேண்டும்..,

Byஜெ.துரை

Oct 19, 2025

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025- ஆம் ஆண்டுக்கான சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி.எஸ்.முருகன், ஆவடி காவல் துணை ஆணையர் நா.இளங்கோவன்,
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,நடிகை ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன்,

முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனி இடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.

அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஏன் நான் கூட கட்சித் தலைவரை சந்திக்க வேண்டும் என்றால் அவர் அனுமதியுடன் தான் அறிவாலயம் செல்ல முடியும்.
அப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறார்.

இந்த பத்திரிக்கை சங்கத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார்.

நான் உள்ளாட்சி துறையில் 2 முறை, சட்டசபைக்கு 4 முறை, பார்லிமென்ட்டுக்கு ஒரு முறை என மொத்தம் ஏழு முறை தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன்.

26 வயதில் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கி அன்று முதல் பூச்சி முருகன் அண்ணனுடன் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக நட்புடன் பணியாற்றியுள்ளேன்.

போட்டி இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும்.

நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்கியதால் ஆம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார்.

வாழ்க்கையில் முன்னேற துணிச்சல்,லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அவரே வெற்றியாளனாக முடியும்.

நம் குடும்பத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை மதிக்க வேண்டும் மனைவியிடம் கனிவோடு பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,
தனது சிறுவயது தீபாவளி பண்டிகையை பற்றி சுவாரசியமாக மேடையில் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பூச்சி.எஸ்.முருகன் பேசுகையில்,

எப்போதும் சினிமா பத்திரிகையாளர் நலனுக்காக, அவர்கள் உதவிக்காக மட்டுமே தன்னை சங்க தலைவி கவிதா தொடர்பு கொண்டு பேசுவார்.

தன்னால் முடிந்த உதவிகளை சங்கத்துக்கு செய்வேன்.

பூச்சி முருகன் என்ற பெயர் எப்படி வந்தது. அது நாடகத்தில் நடித்ததால் வந்தது. நான் நாடக நடிகராக கலைமாமணி வாங்கி இருக்கிறேன்.

மேலும், நடிகர் சங்க துணைத்தலைவராக இருக்கிறேன் அதனால் மேடையில் கவனமாக பேச வேண்டும்.

சங்க தலைவி கவிதா வைத்த கோரிக்கைகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

ஆவடி காவல் துணை ஆணையர் நா. இளங்கோவன் பேசும்போது,

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

பத்திரிக்கையாளர்களை நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் செல்போனை கண்டு பிடித்தது யார் தெரியுமா? என்று கேட்டு அரங்கை அதிர வைத்தார்.

இதற்கு பதில் தெரிந்தால் யாராவது கூறவும் மனைவியை கூட பிரிந்து இருக்கலாம் ஆனால் இந்த செல்போனை நம்மால் பிரிந்து நம்மால் இருக்க முடியாது என்று கூறி அதற்கு விளக்கம் அளித்தார்.

தீபாவளி பண்டிகை என்பது கருணை, பாசம் என அடுக்கு மொழிகளில் பேசி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில்,

தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர்,

எனது வாழ்க்கையில் பத்திரிகைகள், பத்திரியாளர்கள் தாக்கத்தை குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் மது பழக்கம் கூடாது அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்தும் விவரித்தார்.

எனது தேசிய விருதுக்கு காரணமாக இருந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை ரேகா பேசிய போது, சினிமாவில் நிறைய படங்களில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன்.

நம் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது, நாம் நடித்த படங்களின் போட்டோக்களும், அந்த படங்கள் குறித்து பத்திரிகையில் வந்த செய்திகளும் தான்.

இப்போது யூட்யூப் சோஷியல் மீடியா வந்துவிட்டது. ஆனாலும், ஆனந்தவிகடன், ராணி, குமுதம், தினத்தந்தி, தினமலரில் வந்த செய்திகளை, போட்டோவை மறக்க முடியுமா? அதை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன்.

இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

மேலும் புன்னகைமன்னன் பட நிகழ்வு, அந்த முத்தக்காட்சி குறித்து பல சுவாரசியமான
தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய ரேகா, நான் சினிமாவில் நடிக்க வரும் பொழுது எனக்கு மிகவும் சிறிய வயது விபரமில்லாத வயது, சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவள் நான்.ஆனால் எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் இந்த அளவுக்கு நான் உயர்ந்து மக்களால் நான் கொண்டாடப்பட காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான்.

எனக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க ஆசை.

ஆனால் அது கூடிய சீக்கிரம் நடக்கும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றார்.

சங்கத்தின் தலைவி எஸ்.கவிதா மேடையில் பேசும்போது,

சினிமா பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் தேவை என்பது குறித்து விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சங்க மலருக்கு விளம்பர உதவிகள் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார்.

சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்பு உரை ஆற்றினார்.

விழா முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, தீபாவளி பொருட்கள், புத்தாடை அடங்கிய 8 பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டன.