• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…

ByA.Tamilselvan

Nov 21, 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அரசின் பல்லவேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 7,301 பணிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 16.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24-ம் நடந்த எழுத்துத் தேர்வில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் விவர அட்டவணையை சில தினங்களுக்கும் முன்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதில், டிசம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் 3 உள்ளிட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.