டி.என்.பி.எல் கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது.
சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் சீசன் 5வது விளையாட்டு இன்று துவங்குகிறது. எட்டு அணிகள் மோதும் இந்த டி.20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி ஆகஸ்ட் 15ம் தேதி சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், இரண்டாவது அணிக்கு 30 லட்சமும், ப்ளேஆப்சில் தோற்ற அணிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், பிளேஆப்சிற்கு தகுதி பெறாத அணிகளுக்கு தலா ரூ.12.5 லட்சமும் என 1.7 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
முதல் நாளான இன்று மோதும் லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.ஷாருக்கான், தலைமையிலும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் டார்ல் சுந்தர் ஃ பெராரியோ தலைமையிலான வீரர்களும் மோதுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன. ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.