பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை இன்று காலையிலேயே வங்கிக் கணக்கில் வரவானதால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15-ம் தேதிகளில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மகளிர் உதவித் தொகை பெறும் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.