• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

TN 2026 – திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Apr 11, 2026

கண்ணன் ரவி தயாரிப்பில் உமாபதி எஸ்.ராமையா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”TN 2026 தங்க நட்சத்திரம்”.

இத் திரைப்படத்தில்நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ரெடின் கிங்ஸ்லி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வடநாட்டிலிருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்த குல்கந்த் குமார்(நட்டி நட்ராஜ்)சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி வருகிறார்.படப்பிடிப்பில் மிகுந்த கஷ்டத்தையும் துயரத்தையும் அனுபவிக்கின்றார் நட்டி நடராஜ்.

அவர் நடித்த முதல் படத்திலயே மக்களிடம் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வந்த நடிகர் இவர் தான் என்ற அளவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஜமீன்தார் தம்பி ராமையா எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்.

நட்டி நட்ராஜ் அடுத்த எம்.ஜி.ஆர் இடத்தை அவர் தான் பிடிப்பார் என்ற எண்ணம் அவர் மனதில் உருவாக நட்டி நடராஜை சினிமாவின் உச்சத்தில் கொண்டு செல்ல அதற்கான முயற்சியும் உதவியும் செய்து வருகிறார்.

அவர் நினைத்தபடி சினிமாவில் உச்சத்தை தொட்டார் நட்டி நடராஜ்.

உச்சத்தை தொட்ட நடிகரை வைத்து அரசியல் செய்ய முடிவு செய்து அவருக்கு அரசியல் பேச வைப்பதோடு மட்டுமின்றி புதிய கட்சியையும் தொடங்க திட்டமிடுகிறார் தம்பி ராமையா.

திட்டத்தின் படி கட்சியையும் ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் நீதான் என்று அவருக்கு நம்பிக்கையையும், ஆசையையும் அவர் மனதில் பதிய வைக்கின்றார்.

இந்நிலையில், நட்டி நட்ராஜ் தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்கின்றார்.

அவர் எடுத்த அந்த அரசியல் முடிவு என்ன? நட்டி நடராஜ் முதல்வர் ஆனாரா இல்லையா?தம்பி ராமையா போட்ட திட்டம் நிறைவேறியதா இல்லையா?இதுதான் படத்தின் மீதி கதை.

உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர் அரசியலிலும் பயணித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார் அந்த இடத்தை இனி மேல் யாரும் பிடிக்க முடியாது.

அரசியல் ஆசைக்காக வருபவர்களின் முடிவும் இப்படிதான் இருக்கும் என்பதை நையாண்டியுடன் கலகலப்பாக யார் மனதையும் புண்படுத்தாதவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.

பிழைப்புக்காக வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அவர் பேசும் முதல் வார்த்தையான பொள்ளாச்சி ஊரை தவறாக கூறிய படத்தின் முதல் டயலாக்கில் இருந்து திரையில் அவர் தோன்றும் வசனங்கள் அனைத்தும் தமிழை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவர் பேசும் மொழியும் அவரது உடல் மொழியும் மக்களுக்கு சிரிப்பு மருந்து கொடுத்துள்ளார் குல்கந்த் குமார் தங்க நட்சத்திரம்(நட்டி நடராஜ்)

ஜமீனாக இருந்து அரசியல் ஆசைக்காக நட்டி நடராஜுக்கு அவர் செய்யும் சேவையும்,அவரது அரசியல் வழிகாட்டியுமாக வாழ்ந்த தம்பி ராமையாவை மரியாதை குறைவாக பேசிய நட்டி நடராஜ்,அதை தாங்க முடியாமல் அவர் படும் துயரம்,அரசியல் இப்படித்தான் என்பது போல அப்படியே , ஒரு அரசியல்வாதி போல நடிப்பில் வாழ்ந்துள்ளார் தம்பி ராமையா.

நான் நெல்லை அரசியல்வாதி என்று நெல்லை மொழி பேசி நடிப்பில் சொல்லி உள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

கதாநாயகி ஷெரிட்டா ராவ் மற்றும் சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு சிறப்பாக பயணித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் காலக்கட்டத்தினை மிக அழகாகவும் இயல்பாகவும் படம் பிடித்துள்ளது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கேமரா கண்கள்.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும் கேட்கும் படியாகவும் உள்ளது.

பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கேற்றவாறு சிறப்பாக பயணிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா

மொத்தத்தில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் TN 2026 அரசியல் சிரிப்பு வெடி