• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.39 லட்சம். தங்கம் 207 கிராம் வெள்ளி ஒரு கிலோ 148 கிராம்

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

நடப்பு மாதத்திற்கான உண்டியல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தங்கம் 207 கிராம், வெள்ளி 1 கிலோ 148 கிராம், பணம் ரூ.38 லட்சத்து 95 ஆயிரத்து 647 ரூபாய் வருமானமாக கிடைத்தது.

கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், அறநிலையத்துறை உதவி ஆணையர் து.வளர்மதி, கோயில் கண்காணிப்பாளர்கள் சுமதி, ஜெயசத்தியசீலன், ரஞ்சனி ஆகியோர் மேற்பார்வையில் ஸ்கந்தகுரு வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை, அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் இருந்தனர்.