• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வாக்கு அளிப்பு

ByN.Ravi

Apr 19, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பசுமலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

பசுமலை வாக்குச்சாவடி 90 ல் உள்ள வாக்கு சாவடி மையத்தில், தனது ஜனநாயக கடமை ஆற்றி பின் செய்தியாளர்களை சந்தித்தார்..,

ஜனநாயக கடமையாற்ற இன்றைக்கு ஒரு விரலால் ஓங்கி அடிப்பதை எங்களால் காணமுடிகிறது. தமிழகத்திற்கு விடிவு பெறும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும்.
தமிழகத்தில் உரிமைகளை காத்திட மத்தியில் இருக்கிற அரசு உரிமைகளை மீட்டிட பல்வேறு வகையான நல்ல திட்டங்களை அறிவித்த அண்ணா திமுகவின் நல்ல முயற்சியால் இந்த தேர்தல் உயர்ந்த தேர்தலாக ஒப்பற்ற தேர்தலாக ஜனநாயகம் காக்கும் தேர்தலாக தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் தேர்தலாக இது எங்களால் காணமுடிகிறது.
குறிப்பாக நாங்கள் இருக்கிற விருதுநகர் நாடாளுமன்றம், மதுரை நாடாளுமன்றம் மிகச் சிறப்பான மக்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பது எங்களால் காண முடிகிறது. இந்த தேர்தல் எங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று முழுமையாக கடமை ஆற்றுவதே பல்வேறு விஷ தன்மை ஒழித்து உண்மையான உடல்பற்ற தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது.