• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழா – தருமபுர ஆதினம் சாமி தரிசனம்

Byதரணி

Oct 27, 2022

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் வருகை புரிந்த தருமபுர ஆதீனத்திற்கு பூர்ண கும்ப மரியாதையும், சாமி தரிசனம் செய்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா பிரசித்து பெற்றது. 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ஆம் தேதி கோர்த்தான அம்பிகையிடம் இருந்து சூரபத்மனை அழிக்க ” சக்திவேல்” வழங்கும் விழா நடைபெறும். பின்னர், வரும் 30 தேதி மாலை சூரபத்மனை அழிக்க முருகன் சக்திவேலை கொண்டு சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சூரபத்மனை அழிக்கும் “சூரசம்ஹார லீலை” நிகழ்ச்சி நடைபெறும்.வரும், 31ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவினை ஒட்டி முருகன் சட்டத்தேரில் வீதி உலா பவனி வருவார்.
திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தருமபுர ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.கந்த சஷ்டி திருவிழா 3 ஆம் நாள் திருநாளாக இன்று சன்னதி யில் பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நிர்வாக அதிகாரி சுரேஷ் அய்யா தலைமையில் தருமபுர ஆதீனத்திற்கு திருக்கோவில் சார்பாக பூர்ண கும்ப மரியாதை யும் சாமி தரிசனம் செய்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.