• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியர் பணியை புறக்கணிக்காமல், தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

ByKalamegam Viswanathan

Feb 22, 2024

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியர்க்கு உதவித்தொகை 6 மாத காலமாக வழங்காததை கண்டித்து , கருப்பு பேட்ச் அணிந்து அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயின்று பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து,  மாத்திரைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 25 ஆயிரம் வீதம் உதவித் தொகையாக அரசின் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இவர்களுக்கு உதவி தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், அதனை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்  தங்களது ஆடையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு தங்களுக்கு நிலுவையிலுள்ள உதவி தொகையை விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பணியை புறக்கணிக்காமல், தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.