இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 % சதவீதம் வனப்பகுதியை பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வர துவங்கியுள்ளன.
இந்நிலையில் உதகை அடுத்த சிங்கார பகுதியில் உறுமல் சத்தத்துடன் கம்பீரமாக சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், புலியை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது அலைபேசியில் பதிவு செய்த காட்சி சமூக வலைத்தளங்கள் வைரல் ஆகி வருகிறது.