• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரைக்கு வருகிறது டைடல் பார்க்..!

Byவிஷா

Oct 10, 2023
தமிழகத்தில் மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மதுரைக்கு வரவுள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைய உள்ள புதிய டைடல் பார்க் வேலைப்பாடுகள் முடிந்த பிறகு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அரசு இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.