• Thu. Dec 7th, 2023

எப்படி அடிச்சாலும் முதலிடத்தை தக்க வைத்த டிக்டாக்

Byகாயத்ரி

Dec 25, 2021

2021ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளங்களில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
உலக அளவில் வீடியோ பகிரும் செயலியான டிக்டாக்கின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஆண்டில் இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் டிக்டாக் போன்ற வேறு செயலிகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்த க்ளவுட்பேர் நடத்திய ஆய்வில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது, கூகிள் இரண்டாம் இடத்திலும், பேஸ்புக் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *