• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை

Byவிஷா

May 7, 2024

கர்நாடகாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்த்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்தாண்டில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியானவகையில் பெய்யவில்லை. இதனையடுத்து கர்நாடகாவில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு கிடக்கிறது. அத்துடன், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூருவில் நல்ல மழை பெய்தது.
அதன்படி பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று கனமழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் சிவாஜி நகர், மெஜஸ்டிக், விதானசவுதா, ஆனந்தராவ் சர்க்கில் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.