ஆடுதுறை பாமக பேரூராட்சி மன்ற தலைவர் ம. க.ஸ்டாலினை
கொலை செய்ய முயன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆடுதுறை பேருராட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு
வீசிய ஆறு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம், திருவிடை மருதூர் – காவல்நிலையத்திற்குட்பட்ட மேலமருத்துவக்குடி பகுதியில் பா.ம.க கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேருராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் என்பவரை கடந்த 05.09.2025-ம் தேதி பேருராட்சி அலுவலகத்தில் இருந்த போது முன்விரோதம் காரணமாக சுமார் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் நான்கு சக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாள்
கொண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதில் ம.க.ஸ்டாலின் அவர்களின் வாகன ஓட்டுநரான திருவிடைமருதூர் சிந்தாமணி மஞ்சமல்லி குடியான தெருவை சேர்ந்த அருண்(வயது-25) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெற்று திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்து எதிரிகளை தேடி வந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 15 நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் ஆறு பட்டாகத்திகள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கில் திருவிடைமருதூர், மேல தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்த ஆகாஷ் ஹிரிஹரன், கீழ தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்த நபர்களான மருதுபாண்டியன், மகேஷ், திருவிடைமருதூர் 12A, ரயில்வே காம்பவுண்டை சேர்ந்த சேரன், பிச்சை கட்டளை புதுத்தெருவை சேர்ந்த சஞ்சய் மற்றும் பானாதுறை கள்ளர்
தெருவை சேர்ந்த விஜய் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோளின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் த.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதின்படி மேற்படி குற்றவாளியை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
