• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்து மூவர் பலத்த காயம்..,

ByP.Thangapandi

May 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில் உசிலம்பட்டி- வத்தலக்குண்டு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் மதுரை மாவட்டம் சோழங்குருணி மற்றும் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டை பகுதியில் இருந்தும் பணியாளர்கள் பணியாற்றினர்.

இதில் ஒரு மின்கம்பத்தில் சோழங்குருணி கிராமத்தைச் சேர்ந்த அருண்( 21), பாண்டியராஜன் (22) மற்றும் தலைவன்கோட்டையைச் சேர்ந்த பொன்பாண்டி(38) ஆகியோர் மேலே ஏறி பணியில் ஈடுபட்டனர்.

இரவு 8.00 மணியளவில் திடீரென மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்தது. இந்நிலையில் மூவரும் பாதுகாப்பு கயறு கட்டியிருந்ததால் தூக்கி எறியப்பட்டதும் மின்கம்பத்திலேயே தொங்கியவாறு இருந்தனர்., அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிப்பு செய்து மூவரையும் கீழே கொண்டுவந்தனர்.

இதில் பலத்த காயங்களுடன் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் 108 மூலம் மீட்டு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கயறு கட்டியிருந்ததால் மூவரும் பணி நிறைவடையாத நிலையில் மின்சார இணைப்பு கொடுத்தது யார் என்பது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியில் ஈடுபட்டபோது திடீரென மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்து மூவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.