கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு பின்புறம் ஆளரவமற்ற பகுதியில் தனிமையில் காரில் இருந்த கல்லூரி மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவருடன் இருந்த இளைஞரை அறிவாளால் வெட்டி தப்பி ஓடிய மூன்று பேரை கோவை துடியலூர் அடுத்த வெள்ளக் கிணறு பகுதியில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்

காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் கையில் வைத்திருந்த அறிவாளால் தலைமை காவலர் சந்திரசேகர் என்பவரை அறிவாளால் தாக்கி அவர்கள் தப்பி ஓட முற்படவே போலீசார் மூவரையும் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் * அவர்களது பெயர் குணா எனும் தவசி
சதீஷ் எனும் கருப்பசாமி கார்த்திக் எனும் காளீஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மூவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதே வேளையில் குற்றவாளிகள் அரிவாளால் வெட்டியதில் இடக்கை மணிக்கட்டில் பலத்த வெட்டு காயத்துடன் இருந்த தலைமை காவலர் சந்திரசேகரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)