• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம்

ByA.Tamilselvan

May 17, 2022

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பங்கு வர்த்தகம் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .அதுமட்டுமல்ல மிகபெரிய சரிவை சந்தித்த பங்குகளால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.எல்ஜசி ஊழியர்கள், பொதுமக்கள்,அரசியல் கட்சியினரின் கடும் எதிப்பையும் மீறி மத்திய அரசு பங்குகளை விற்க முடிவு செய்தது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது.
பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.இந்தநிலையில் எல்ஐசி பங்குகள் இன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீட செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது. எனினும் பின்னர் பங்கு விலை சற்று உயர்ந்தது.சந்தைக்கு வந்தமுதல் நாளிலேயே பெரும் லாபம் ஈட்டலாம் என்று எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்செக்ஸ் இன்று 1000 புள்ளிகள் வரை உயர்ந்தும் கூட எல்ஐசி பங்குகள் விலை உயராததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.