• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுகவிற்கு துரோகம் பண்ணி குழப்பம் விளைவித்தவர்கள் வெளியேறி விட்டார்கள்-கே.டி.ஆர்

ByK Kaliraj

Feb 28, 2026

அதிமுகவில் இருந்த சள்ளு- அள்ளு எல்லாம் திமுக கூட்டணிக்கு ஓடிப் போய்விட்டனர், அதிமுகவிற்குள்ளிருந்து துரோகம் பண்ணிவிட்டு, கட்சிக்குள் குழப்பம் விளைவித்தவர்கள் எல்லாம் வெளியேறி போய்விட்டார்கள் என ஒபிஎஸ் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்….எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொக்கிஷமாக உள்ளது.

சிவகாசியில் அதிமுக சார்பாக வரும் சட்டமன்ற தேர்தல் களப்பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

எடப்பாடி பழனிச்சாமி குறித்து நான் எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்து அனைவரும் கே.டி.ராஜேந்திர பாலாஜியை இதுவரை முரட்டுத்தனமாகத்தான் பார்த்தோம். அடிக்கடி சண்டை போடுவார். கடுமையாக விமர்சனம் செய்வார். என்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் அவர் எழுதியது அனைத்தும் கதை அல்ல- வரலாறு என்று கருத்து தெரிவித்து விமர்சித்தனர்.

எனக்கு 18- வயதிலேயே நான் கதை- வசனங்கள் எழுதி சினிமாத் துறைக்குப் போய் அலைந்தவன். கதை எழுதி ஏற்கனவே பரிசு வாங்கி உள்ளேன். கதை எழுதுவது, கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு கைவந்த கலை.

நாம் மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வரவேற்க ஆர்ப்பரித்துச் செல்ல வேண்டும். தோளில் அதிமுக கலரிலான துண்டு- மப்ளர் போட்டுக் கொண்டு கூட்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேச வரும்போது கழுத்தில் கிடக்கும் துண்டை எடுத்து தலைக்கு மேலே கையினால் சுழற்ற வேண்டும். ஆரவாரகமாக- ஓங்காரமாக குரல் கொடுத்து மிகப்பெரிய எழுச்சியை உருவாக்க வேண்டும்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் நல்ல மனுஷன் மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு வேட்டு வைத்து விட்டார். காங்கிரஸ்- திமுக கூட்டணி இரண்டாகப் பிளந்து நிற்கிறது.

அதிமுகவில் இருந்த சள்ளு- அள்ளு எல்லாம் திமுக கூட்டணிக்கு ஓடிப் போய்விட்டனர், அதிமுகவிற்குள்ளிருந்து துரோகம் பண்ணிவிட்டு, கட்சிக்குள் குழப்பம் விளைவித்தவர்கள் எல்லாம் வெளியேறி போய்விட்டார்கள் என ஒபிஎஸ்ஸை விமர்சித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொக்கிஷமாக உள்ளது என்றார்

இரண்டரை கோடி வாக்குகள் வாங்கினால் போதும் தமிழகத்தில் ஆளுங்கட்சி அதிமுக தான். அதிமுக நிர்வாகிகள் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் விட்டுக் கொடுக்காதீர்கள். அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியாக களமாடி, உருவாகிப் பேச வேண்டும்,

இந்த இயக்கத்திற்காக, அதிமுகவின் வளர்ச்சிக்காக, கட்சியின் கொள்கைக்காக உங்கள் சட்டைப் பாக்கெட்டி லிருந்து பத்து ரூபாய் நீங்கள் எடுத்துச் செலவழித்தால் அது பத்து மடங்காக பெருகி மீண்டும் உங்கள் பாக்கெட்டிற்கே வரும், ஏன் என்று சொன்னால் இது எம்ஜிஆர் கட்சி. மதுரையில் நடைபெறும் மாநாட்டுக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பத்தாயிரம் பேரை அழைத்து வரச் சொல்லி எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நம்முடைய மனசாட்சிக்கு அவரை ஏமாற்றினால் நம்மை ஏமாற்றுவதற்கு சமம். இயக்கத்தை ஏமாற்றுவது உன்னையே உன்னை ஏமாற்றுவதற்கு சமமாக நினைத்து

நான் என்னால் என்ன முடியுமோ அதை செய்து கொடுக்கிறேன். என்னால முடிஞ்ச தை நான் செய்து கொடுக்கிறேன். உங்களால் முடிந்ததை நீங்க செய்து கொடுங்கள்.

அதிமுக வளர்ச்சி பெற்று விட்டது. கடமை,கடன்களை எல்லாம் தேர்தல் முடிந்த பின்னாடி நான் அடைத்து விடுகிறேன்.

வருகிற மே 5-ம் தேதிக்குப் பிறகு உன்னால் தானே நாங்கள் செலவு செய்தோம் என்று என்னை சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். உன்னால் தானே வாகனம் எடுத்துச் சென்றோம், உன்னால் தானே புளியோதரை, லெமன் சாதத்துடன் ஊறுகாய் போட்டோம் நீ பாட்டுக்கு சென்னையில் போய் படுத்துக் கொண்டால் என்ன அர்த்தம் என்று என்னை கேட்கலாம். நிச்சயமாக அதற்கெல்லாம் விடையும், பதிலும், பலனும் முழுமையாக நிச்சயம் நான் உறுதியாக கொடுப்பேன்.

தமிழ்நாடு முழுக்க திமுகவினர் யாருக்கும் ஒன்றும் வாங்கிக் கொடுக்காமல் தப்பு செய்கின்றனர். ஏதோ ஒரு நேர விதி வசத்தில், நமக்குள் ஒரு சில பிரச்சனைகள் இருக்கும் போது ஆட்சிக்கு வந்து விடுகின்றனர். இந்த தடவை தேர்தலில் சம்பட்டி ஆப்பாக எடுத்து அடித்து விடுவோம்.

இந்த தடவை நமக்குள் ஒரு பிரச்சனையும் கிடையாது. திமுகவையும், ஸ்டாலினையும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி விட்டு, எடப்பாடி பழனிச் சாமியை கோட்டைக்கு அனுப்புகின்ற பணியை நாம் அருமையாக செய்யப் போகிறோம். என்றார். .