• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்

Byதரணி

Jul 25, 2022

பாலியல்வன்கொடுமை உள்ளான தனது மகளின் பரிதாப நிலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் வசித்துவருபவர் பா.ஏசம்மாள். இவருக்கு கலைச்செல்வி(17),பாண்டிச்செல்வி(13)என இரு மகள்களும் பரத் (15) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னர் கணவர் இறந்துவிட தனது 3 பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்.மேலும் இவரது 2மகள்களுக்கும் மனநிலை சரியில்லாதவர்கள்.இந்நிலையில் மூத்த மகள் கலைச்செல்வியின் வயிறு சற்று வீங்கியிருந்தது,வாந்தி எடுத்தும் வந்தார். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில் கர்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதை கலைப்தற்காக சிவகாசி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தேன்.அங்குள்ள மருத்துவர்கள் திருமண மாகமல் 17வயதில் கர்பமானது எப்படி? என எனதுமகளிடம் விசாரித்தனர்.அப்போது தன்னை நிறையபேர் கெடுத்ததாக கூறினாள். அதையடுத்து சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் என்மகளை விசாரணை செய்தனர். அவள் நிறைய பேரின் பேரை கூறினாள்.அதில் எனது அண்ணன் மகன் விக்னேஷ் பெயரை கூறினாள்.சிவகாசி அனைத்துமகளிர் காவல் நிலைய போலீசார் எனது அண்ணன் மகனை மட்டும் கைதுசெய்தனர்.மற்றவர்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் எனது மருமகன் விக்னேஷ் எந்த தவறும் செய்யவில்லை செய்யவும் வாய்ப்பில்லை.எனது மகள் தற்போது காவல்துறையின் கீழ் அரசுகாப்பகத்தில் இருக்கிறாள். மேலும் தவறு செய்யாத எனது மருமகனை கைது செய்ததால் பெரும் மனஉலைச்சலுக்கு ஆளாகிவுள்ளேன். உண்மை குற்றவாளிகளை கைது செய்து தவறு செய்யாத எனது மருமகன் விக்னேஷை விடுதலை செய்யமாறு கேட்டுக்கொள்கிளேன் விருதுநகர் மாவட்டகாவல்கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.