• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீனவ விசைப்படகுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் திருட்டுத்தனமாக பயோ டீசல் விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது!..

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது திருட்டுத்தனமாக பயோ டீசல் விற்பனை செய்ய முயன்றவர்களை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பயோடீசலை குமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் மீனவர்களுக்கு விசைப்படகுகளில் குறைந்த விலையில் டீசல் வழங்கிட கொண்டுவந்த டேங்கர் லாரியை மடக்கிப் பிடித்தனர் அதிகாரிகள்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தலாபுரம் சார்ந்த லெகசி கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் மரியசுரேஷ்குமார் என்பவர் குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஜெரால்டு என்பவரை அணுகி அவர் மூலமாக கொடுப்பதற்காக லாரியை அனுப்பி வைத்துள்ளார். அந்த லாரியானது அஞ்சுகிராமம் அருகே உள்ள அஜந்தா சிட்டி பகுதியில் நிறுத்தி சுமார் 4000 லிட்டர் பயோ டீசலை 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கேன்களில் விற்பனை செய்வதற்காக பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களைப் பிடித்தனர். மேலும் லாறியைக் கைப்பற்றி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து

முத்தலாபுரத்தை சேர்ந்த முருகன், மேட்டுக்குடியிருப்பை சேர்ந்த சிகாமணி ஆகியோரை கைது செய்தனர். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவர், லாரி உரிமையாளர் உட்பட  மூவரை வலைவீசி தேடி வந்த நிலையில் தனிப்பிரிவு போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் அனைத்து செக்போஸ் வெளியிலும் வரும் டீசல் பெட்ரோல் கரிம வளங்கள் அனைத்தையும் உரிய முறையில் சோதனை செய்தால் பல சமூக விரோதிகள் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு, காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.