• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக என்ற கட்சி சந்திக்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும்-எம்.பி ஜோதிமணி பேட்டி..,

ByAnandakumar

Mar 6, 2026

கரூரில் உள்ள தனியார் அரங்கில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது. ஆளுநர் மாளிகையை பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார். ஆளுநரை அறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றம் செய்து விட்டார்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலைப்பட தேவையில்லை. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவார்.

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற மாட்டார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள் இந்தியா கூட்டணி மிக நிச்சயமாக வெற்றி பெறும் அதிமுக பாஜக கூட்டணி இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு செல்வார்கள். நிதிஷ்குமார் பதவி விலகல் செய்துள்ளார் அந்த மாநிலத்தில் கூட்டணி கட்சியை பாஜக கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறார்கள் அதேபோல் தமிழகத்திலும் அதிமுக என்ற கட்சி செய்யக்கூடிய கடைசி தேர்தலாக இது இருக்கும். இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக்கூடிய விஜய் நிச்சயமாக இரண்டாவது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார்.