ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைத்தல் கூழ் காய்ச்சி ஊற்றுதல், மாவிளக்கு வைத்தல், திருவிளக்கு பூஜை என்று சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர்.

அந்த வகையில் மதுரை மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தத்தனேரி வைகை வடகரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவில் 62 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்வில் மத்திய 1ம் பகுதி அதிமுக அவை தலைவர் வெள்ளைச்சாமி 22 வது வட்ட கழக செயலாளர்கள் சேகர்,பாலமுருகன் மாநகர மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் விழா கமிட்டியின் சார்பாக மதிவாணன் மலைச்சாமி ஆறுமுகம் குமார்-2 புவனேஸ்வரன் வசந்தகுமார் முருகன் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மேல பொன்னகரம் 3வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ வீரகாளி அம்மன் ஹிஸ்டரி சிவசக்தி மாரியம்மன் திருக்கோவில் 85 ஆம் ஆண்டு உற்சவ விழாவில் முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் தலைவர் ராஜரத்தினம் கௌரவ தலைவர் பி எம் மன்னன்(துணை மேயர்), செயலாளர் ஹரிஹரன் துணைத் தலைவர்கள் அழகர் ரமேஷ் துணைச் செயலாளர்கள் ராம் பிரசாத் ரங்கராஜ்,மற்றும் ராமு ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர், மேலும் மேலபொன்னகரம் 6 7 8 வது தெருக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 58வது ஆண்டு உற்சவ விழாவிலும் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைகளில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைத்தல் கூழ் காய்ச்சி ஊற்றுதல், மாவிளக்கு வைத்தல், திருவிளக்கு பூஜை என்று சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர்.
அந்த வகையில் மதுரை மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தத்தனேரி வைகை வடகரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவில் 62 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்வில் மத்திய 1ம் பகுதி அதிமுக அவை தலைவர் வெள்ளைச்சாமி 22 வது வட்ட கழக செயலாளர்கள் சேகர்,பாலமுருகன் மாநகர மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் விழா கமிட்டியின் சார்பாக மதிவாணன் மலைச்சாமி ஆறுமுகம் குமார்-2 புவனேஸ்வரன் வசந்தகுமார் முருகன் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மேல பொன்னகரம் 3வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ வீரகாளி அம்மன் ஹிஸ்டரி சிவசக்தி மாரியம்மன் திருக்கோவில் 85 ஆம் ஆண்டு உற்சவ விழாவில் முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் தலைவர் ராஜரத்தினம் கௌரவ தலைவர் பி எம் மன்னன்(துணை மேயர்), செயலாளர் ஹரிஹரன் துணைத் தலைவர்கள் அழகர் ரமேஷ் துணைச் செயலாளர்கள் ராம் பிரசாத் ரங்கராஜ்,மற்றும் ராமு ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மேலபொன்னகரம் 6 7 8 வது தெருக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 58வது ஆண்டு உற்சவ விழாவிலும் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைகளில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.