திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலாண்மை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலை நிமிரட்டும் என நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளர் மணிமாறன் மாவட்ட மகளிர் அணி சிலர் கிருத்திகா தங்க பாண்டியன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திருப்பரங்குன்றத்து மகளிரை பார்க்கும் பொழுது, இங்கே கூடியிருக்கின்ற உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது பெண்கள் வீரம் உடையவர்கள், அச்சம் என்பதை அறியாதவர்கள்,

ஐந்து வருடங்கள் நமக்கு நல்லாட்சி செய்த ஆட்சியினுடைய திட்டங்கள் என்ன என்பதை கேட்க ஆர்வத்தோடு கூடியிருக்கின்ற பெண் சிங்கங்களே, உங்களுக்கு என்னுடைய அன்பான மாலை வணக்கம்-தமிழச்சி தங்கபாண்டியன்
2021-ல் நீங்கள் முதலமைச்சரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதைப் போல இங்கும் அமர்த்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கின்றேன்.
இந்த மண், மிகக் குறிப்பாக இந்தத் தொகுதி, எங்களுடைய கழக முன்னோடிகளான ஐயா காவேரி மணியம், ஐயா அக்கினிராஜ் முதலியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து கழகத்தை வளர்த்து உங்களுக்கு மக்கள் தொண்டாற்றிய மண்
கொஞ்ச காலம் இந்த மண்ணிலே மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் வந்திருக்கலாம், பதவியிலே அமர்ந்திருக்கலாம். ஆனால் மீண்டும் இந்த மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, இந்த மண்ணில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வெற்றி இந்த மண்ணிலே இருந்து உறுதி செய்யப்படும் என்பதற்கு இங்கு கூடியிருக்கின்ற நீங்களே சாட்சி.
5000 ரூபாய் என்பது இந்த தமிழ்நாடு பெண்களுடைய நம்பிக்கைக் கோட்டை என்று நிரூபித்திருக்கின்ற உங்களுடைய மாண்புமிகு முதலமைச்சர் உங்களுக்காக, உங்களின் உரிமைத் தொகையாக உங்கள் வங்கிக் கணக்கிலே செலுத்தியத் தொகை.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் இந்த அரசு
வணிக வளாக கட்டிடங்கள் தோப்பூர்ல, மேலக்குயில்குடி மருத்துவ பரிசோதனை ஆய்வகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடங்கள், கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் புதிய கட்டிடங்கள், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டம், ஹார்விபட்டி, சூராவளி மேடு சிறுவர் பூங்கா அமைச்சிருக்காங்க.
திருநகர் மகாலட்சுமி காலனி நகர்ப்புற நலவாழ்வு மையம், திருப்பரங்குன்றத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம், உச்சப்பட்டி தமிழ்நாடு நகர்ப்புற வாரிய குடியிருப்பில் புதிய கட்டிடங்கள் பெருமுயற்சி செய்து கொண்டு வந்திருக்கின்ற மாவட்ட செயலாளர் அவர்களுக்கும், இங்கே இருக்கின்ற கழக உடன்பிறப்புகளுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்-
தமிழக அரசு பெண்களுக்காக மட்டுமல்ல ஆண்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளது குறிப்பாக மாணவர்களுக்கு
நான் முதல்வன்”னு ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காரு. அதுவும் மாணவ மாணவிகளுக்கு தான். கோச்சிங் கிளாஸ்ல சேர்ந்து தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு, அரசு பள்ளியிலே படிக்கின்ற மாணவர்கள் IIT, இந்த மாதிரி AIIMS போன்ற மிகப்பெரிய இடங்களுக்கு, இன்ஸ்டிடியூஷனுக்கு போறதுக்காக அவர்களை தயார்படுத்துவது.
நேற்றைக்கு முன் தினம் வரலாற்றில் பதிய வைக்க வேண்டிய சிறப்புமிக்க செய்தியாக, அரசு பள்ளியிலே பயின்ற 488 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக JEE என்று சொல்லப்படுகின்ற நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வாகியிருக்காங்க.
நாம நன்றியுள்ளவர்களாக இருப்போமே ஒழிய ஏமாளிகளாக இருக்க மாட்டோம் என்பதை நீங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ஒரு பொழுதும் தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் அடிமையாக இல்லாமல் யாருக்கும் எஜமானனாக இல்லாமல் யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் தன்மானத்தோடு சுயமரியாதையோடு வாழ்பவன். தன் மொழி, நிலம், இனம் எதையும் விட்டுக் கொடுக்காதவன்.
இன்னைக்கு விதவிதமா கூட்டணி அமைச்சுட்டு வரலாம். அவரோடு கூட்டு சேர்ந்திருக்கின்ற அண்ணா திமுக. கடந்த பத்தாண்டு காலத்திற்கு முன்பாக நம்முடைய ஆட்சிக்கு முன்பாக பத்தாண்டு காலம் இங்க ஆட்சியிலே இருந்தது. எந்தெந்த வகையிலே தமிழர்களுக்கு அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்
நீட் தேர்வில் நமது குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர்
அந்த நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய விட்டது அண்ணா திமுக
சமீபத்துல தேசப்பிதா மகாத்மா காந்தியினுடைய பெயரை மாற்றி மன்ரேகா திட்டத்தை ‘கிராமின் ஜீ ராம்ஜி’னு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. நம்ம 100 நாள் வேலை, நீங்க எல்லாம் அதத் தெரிஞ்சுக்கணும். அந்த 100 நாள் வேலையை 120 நாள் ஆக்கப் போறேன்னு பொய் சொல்லி கொண்டு வர்றாங்க.
இன்னைக்கு 100நாள் வேலையை அவங்க முழுசா கொடுத்திருக்காங்க அந்த வேலைக்குரிய தொகை 3000 கோடி பாக்கி இன்னைக்கு கொடுக்கல
அதை ஒன்றிய அரசாங்கமும் புரிஞ்சுக்கணும்.
அதாவது GSTயில் நிதி இவ்வளவு கொடுக்கிறோம், இவ்வளவு கொடுக்கிறப்போ நீங்க எங்களுக்கு வேண்டியதைத் தாங்க அப்படின்னு உரிமையோடு கேட்கிறோம்.
ஆனா, ‘நீங்க ஹிந்தியை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஹிந்தியைப் புகுத்துகின்ற புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட வேண்டும், அப்படி என்றால்தான் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுடைய ஊதியத்தைத் தருவோம்’ என்று ஒன்றிய அரசு சொன்னபொழுது, ‘நீங்க 3000 கோடி இல்ல, 10000 கோடி கொடுத்தாலும் தேவையில்லை; என்னுடைய குழந்தைகளுக்கு என்னுடைய மொழி உரிமையை அடகு வைத்துவிட்டு அந்தச் சம்பளப் பணத்தை நான் வாங்க வேண்டிய அவசியமில்லை’ என்று சொன்னவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்பாதி சரித்திரத்தை நான் எழுதினேன், மீதியை என் தம்பி கருணாநிதி எழுதினான் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
இன்றைக்கு திமுகவின் சரித்திரத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எழுதினால், வருகின்ற சரித்திரத்தை நம்முடைய இளைஞரணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எழுதுவார்
அவர் தூக்கிக் காண்பித்தாரே ஒற்றைச் செங்கல், அந்த எய்ம்ஸ்-னுடைய கதி உங்களுக்குத் தெரியும். இன்று வரை என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
வெறும் அறிவிப்புகள், அதிலும் தமிழர்களை இவ்வளவு வஞ்சித்துவிட்டு, ஏமாற்றுகின்ற அறிவிப்புகளைச் செய்துவிட்டு உங்களை நாடி வருபவர்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
எலிதவளை கூட்டணி சேர்ந்தால் எவ்வாறு பொருந்தாத கூட்டணியோ அதை தான் அதிமுக – பாஜக கூட்டணி அமையும்
இதில் கமுகும் சேர்ந்துள்ளது. இது கடைசியில் எலியும் தவளையையும் கொன்றுவிடும் எலி – தவளை அதிமுக கூட்டணி கழுகு பாஜக ஆகையால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து விடியல் தரும் முதல்வரை அதரிக்க வேண்டும்.
2 ஆயிரம் ரூபாய் 2026 தேர்தலுக்கு பின் மகளிருக்கு உரிமைத்தொகை.
காலை உணவு திட்டம் மாணவர்களின் பட்டினியை போக்கி அறிவை வளர்க்கும்
உங்கள் உரிமைகளை உங்களுக்கான நலன்களை உங்களுக்காக ஒரு பாதுகாப்பான சூழலை மிகக்குறிப்பாக பெண்களாகிய நாம் தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள் தான் ரொம்ப சேஃபா ரொம்ப நல்லபடியா இங்க வட மாநிலத்தவர் வந்து பணியாற்றுகின்ற எல்லா இடத்திலும் தமிழ்நாடு
பாதுகாப்பான மாநிலம் என ஆளுநர் ஆர் என் ரவி வழங்கியுள்ளார்.
மக்களுக்காக மக்களிடையே சென்று திட்டங்களை வகுத்து நல்லாட்சி நடத்துகின்றார்களோ அவர்கள் தான் திராவிடர்கள் உண்மையான தலைவர்கள் என்று பெயர் இருக்கிற அண்ணா சொன்னதை நினைவூட்டி உதயசூரியன் இன்று மட்டுமல்ல என்றென்றும் அதற்கான முதல் வெற்றி உதயசூரியன் என்றென்றும் உதிக்கட்டும் திருப்பரங்குன்றத்திலே தொடங்கட்டும் என தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.






