• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய திருக்குறள் பெருவிழா!

ByKalamegam Viswanathan

Feb 10, 2026

மேலூர் வட்டம் அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி செயலாளர்&இளைஞர்களின் வெற்றிப் பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார்.

முதல் பிரிவில் மாணவி யமுனா முதல் பரிசு ரூ.1001 தொகை,பதக்கம்,சான்றிதழையும், மாணவி மதுஸ்ரீ இரண்டாம் பரிசு ரூ.801தொகை,பதக்கம், சான்றிதழையும்,
மாணவி பூவிகா ரூ.501 தொகை,பதக்கம்,சான்றிதழையும் பெற்றார்கள்.
இரண்டாம் பிரிவில் மாணவி துர்கா முதல் பரிசு ரூ.1001 தொகை, பதக்கம், சான்றிதழையும், மாணவர் ராஜாராம் இரண்டாம் பரிசு ரூ.801தொகை,பதக்கம், சான்றிதழையும் பெற்றார்கள்.

மாணவி சஷ்மிதா சிறப்பு பரிசு ரூ.501 தொகை,பதக்கம்,சான்றிதழையும் பெற்றார்.
போட்டியில் பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பதக்கம்,சான்றிதழ் வழங்கப்பட்டது. இயற்கை ஆர்வலர் புத்தக வாசிப்பாளர் கல்லானை சுந்தரம், பாரதிதாசன் வாசகர் வட்டம் சந்தோஷ் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றார்கள்.