• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

ByN.Ravi

Apr 21, 2024

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருக்கல்யாண விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதே போல் இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கணேசன் பட்டர் பூஜை செய்து திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் வீரபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி உள்பட கிராம பொதுமக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டி மற்றும் கிராமம் பொதுமக்கள் செய்தனர். இதைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள்சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ் திருக்கோவில் திருக்கல்யாண நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அலங்கரி
க்கப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனை வழிபட்டனர். இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விழா ஆலயத்தில் திருக்கல்யாண நடைபெற்றது. மேலும், தாசில நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசக்தி விநாயகர் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம் ஆகிய கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிவன் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மகா ஹோமங்களும் திருக்கல்யாண நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதான வழங்கப்பட்டது. தாசில்நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாணத்தை முன்னிட்டு, அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.