• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

ByN.Ravi

Apr 21, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அய்லாண்டேஸ்வரி அம்மன் சமேதமூலநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் விழா நடைபெற்றது .
விழாவை முன்னிட்டு, இங்குள்ள திருமண மண்டபத்தில் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடன் விழா தொடங்கியது . இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன், கண்ணன் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகவேள்வி நடத்தினர். இதைத் தொடர்ந்து, பெண்கள் கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர். முகேஷ்குமார் மாப்பிள்ளை வீட்டாராக விஷ்வத்சேனன் பெண் வீட்டாராக திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன் தீபாராதனை மற்றும் மகா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
இதை தொடர்ந்து, திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள் மணி, நித்தியா, ஜனார்த்தனன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை திருமண கோலத்தில் யானை வாகனத்தில் சுனாமியும், காமதேனு அம்பாளும் வீதி உலாவும், நாளை காலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி புறப்படும் நடைபெறும். நாளை மறுநாள் சித்ராபௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.