விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் முத்துமாரி நாடார் தலைமை வகித்தார். பள்ளிச்செயலாளர் பெரியண்ண ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.
பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, மாறுவேடப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம், சிலம்பம், வில்லுப்பாட்டு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக காமராஜா திருவுருவப் படத்துடன் மாணவர்களின் ஊர்வலம் நடை பெற்றது. உறவின்முறை ராஜேந்திரன், பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் கணேசன், நடராஜன், பத்திரகாளியம்மன், பள்ளி செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில். ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.
