தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மணீடலகுழு தலைவர் ஜெயபிரதீப் பதவி நீக்கம். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அறைக்கு சீல் வைத்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் விதிமுறைகளை மீறும் மேயர், துணை மேயர், மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் . நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் விதிமுறைகளை மீறியதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இரவில் அவரது அறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அறையை பூட்டி சீல் வைத்தனர்.