• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Feb 21, 2024

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி திருக்கோவில் நடந்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு வருட அபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் உச்சப்பட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். மாலை நான்கு மணி அளவில் திருவீதி உலா புறப்பாடு முளைப்பாரி எடுத்தல் பெருமாளுக்கு மகா தீபம் ஏற்றுதல் ஆகிய வைபவங்கள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.