• Sat. Mar 22nd, 2025

பள்ளி அருகே மதுபான கடையில் மதுவை வாங்கி பள்ளி முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

ByKalamegam Viswanathan

Feb 21, 2024

பள்ளியில் பாடம் கற்க செல்லும் மாணவர்கள், தங்களிடம் முதலில் கற்க வேண்டும், பள்ளிவாசலை பாராக மாற்றிய திருந்தா ஜென்மங்கள்-பள்ளி அருகே உள்ள மதுபான கடையில் மதுவை வாங்கி பள்ளி முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குத்தகை ஏலம் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியை சேர்ந்த நபர்கள் அதிக அளவில் டெண்டர் எடுத்துள்ள நிலையில், பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற சட்டத்தை மீறி தற்போது அரசு மதுபான கடையை அமைத்து வருகின்றனர். அந்த அளவில் மதுரை கோச்சடை பகுதியில் சில தினங்களுக்கு முன் 5105 என்ற எண் கொண்ட, பார் இல்லாத டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட கடையின் மிக அருகில் தனியார் பள்ளி உள்ளது. மேற்கண்ட டாஸ்மாக் அமைந்துள்ள பகுதியில் இருந்து தனியார் பள்ளியானது 100 மீட்டர் தூரம் கூட இல்லை. மேலும், மேற்கண்ட டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் நபர்கள் அப்பள்ளி வாசலிலேயே அமர்ந்து மது அருந்தும் சூழ்நிலையும் உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே பள்ளி பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகளை விடுத்துள்ள நிலையில், கோயில் மற்றும் பள்ளிகளுக்கு நடுவே உள்ளூர் அரசு டாஸ்மாக் அதிகாரிகளின் துணையுடன் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 5105-ஐ உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவ்வழியாக செல்லும்போது, ஒரு நபர் மேற்சொன்ன டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு பள்ளிவாசலில் மது அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கல்வியை கற்க செல்லும் சிறுவர்களுக்கு இந்த மதுவை கற்க இது போன்ற செயலில் ஈடுபடும் திருந்தா ஜென்மங்கள் மீது நடவடிக்கை எடுத்து பள்ளி அருகே உள்ள மதுபான கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.