தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி 11மற்றும்12ஆம் வகுப்பு படித்த மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அவர்களின் ஆணையின்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள சௌராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் மணியளவில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் MMT&NURTURE, BHEL, அமைப்பு இணைந்து நடத்தும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி 11மற்றும்12ஆம் வகுப்பு படித்த மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. இந்நிகழ்வில்
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .முருகானந்தம் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்விற்கு மாவட்ட மக்கள் மறுமலர்ச்சி தடம் (MMT) ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன் வரவேற்றார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி வட்டாட்சியர் அர்ஜுனன் வாழ்த்துரை வழங்கினார்.
கல்வி வழிகாட்டுதல் நிகழ்வை முனைவர் திரு .ஆதித்யஉதயன் மற்றும் திரு.சனில்குமார் ஆகியோர் உயர் கல்வி பாடப்பிரிவுகளான மருத்துவம், வேளாண்மை, இயற்கை யோகா மருத்துவம், பொறியியல்,சட்டம், தோட்டக்கலை, கலை கல்லூரி பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயபடிப்புகள்,அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகை குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் நல கண்காணிப்பாளர் திரு.முருகன் நன்றி கூறினார்.நிகழ்வினை திரு.ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலை/உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள், காப்பாளர்கள் காப்பாளினிகள், பூவிழி உட்பட அலுவலகப் பணியாளர்களுடன் திறளான மாணவமாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தேசிய கீதம் பாட நிகழ்வு இனிதே நிறைவுற்றது.