மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்ப்பிடி பகுதியான கம்மாய் கரையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கடைகளை அகற்ற தனக்கன் குளத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக கூறி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் வந்தபோது தற்போது எங்களுக்கு இது குறித்து தெரியாது.

ஆகையால் இரு தினங்கள் கழித்து வருமாறு அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை அப்பகுதி ஆக்கிரமிப்புகளை எடுக்க வந்தபோது இப்பகுதியில் உள்ள வெங்கல மூர்த்தி கோயில் மற்றும் பெருமாள் கோவில் மற்றும் பொது சாவடி நூலகம் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி ஆகியவை கரைப்பகுதியில் உள்ளது. அதனையும் எடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி இப்பகுதி முழுவதும் அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் தாங்கள் ஆக்கிரம்புகளை அகற்ற வேண்டும்.
மேலும் நீங்கள் கொடுத்திருக்கும் நோட்டீசில் ஊருக்கு பொதுவான தண்ணீர் தொட்டி நூலகம் கோவில் பொதுச் சாவடி போன்றவற்றை இடிக்க கூடாது என்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் கூறி இடிக்க விடாமல் மறைத்து நின்று தடுத்தனர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் தரப்பு வழக்கறிஞர்களும் இது குறித்து இன்று வழக்கு பதிவு செய்துள்ளோம். வருகின்ற வியாழக்கிழமை வழக்கு நடைபெற உள்ளது ஆகையால் அதை நிறுத்துமாறு கேட்டனர்.

இதன் அடிப்படையில் போலீசார் மட்டும் வருவாய் துறையினர் ஆக்கிரம்புகளை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்தார். மேலும் நீதி மன்றத்தில் விளக்கம் தெரிவித்து அதன் பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதில் தாசில்தார் கவிதா திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் திருக்கண்ணன் கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர்.