அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்து திருடன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் சாலையில் நின்ற பெண் மற்றும் மூதாட்டி என இருவரிடம், இரு வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் கன்னியாகுமரி அருகேயுள்ள ஏழுசாட்டு பொத்தை பகுதியில் நின்ற பெண் சுதாரித்துக் கொண்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய செயின் பறிப்பு கொள்ளையன், சுவாமிநாதபுரம் பகுதியில் பால் வாங்க வீட்டின் வெளியே வந்த மூதாட்டி வேலம்மாள் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் தங்க செயினை பறிக்க முற்பட்டபோது, செயின் அறுந்து பாதி செயினை பறித்து சென்ற திருடன் மீது, கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயின் அறுந்து பாதி செயினை பறித்து சென்ற திருடன்






; ?>)
; ?>)
; ?>)
