
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தமிழக முதல்வரை கண்டித்தும், திருச்செங்கோடு பகுதியில் நாமக்கல் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தற்போதைய பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் பேசுகையில்..,
பட்டியலின பெண்ணை படிக்க வைப்பதாக கூறி கொடுமையாக தாக்கி உள்ளனர். திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனும், மருமகளும். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை கொடுத்தவுடன், உடனடியாக இருவரையும் பெயர் அளவிற்கு கைது செய்து உள்ளனர்.
அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வில்லை.
திமுக எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாதுகாப்பாக இருக்க முடியும். யார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். முதல்வர் கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்க வில்லை.அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை..
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் கூட இதற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடம் கேட்க அமைதியாக இருந்து விட்டார்.
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஒரே அரசு திமுக அரசு தான்.
தமிழகத்தில் திமுகவை போல வேறு எந்த ஆட்சியும் கெட்டப்பெயர் வாங்கியது இல்லை.. மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் எப்போது தேர்தல் வந்தாலும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கேட்டு உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் வர உள்ள தேர்தலில் மக்கள் கண்டிப்பாக பதில் சொல்லுவார்கள் .அதில் திமுகவிற்கு கடுமையாக சரிவு உள்ளது. மக்களுக்கு ஒரு நீதி ஆளும்கட்சி ஒரு நீதி என்று காவல்துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே அதிமுக வாக்குறுதிகளை கொடுத்து அதனை நிறைவேற்றியது.
ஆனால் திமுக வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கிறது அதில் ஒன்று கூட நிறைவேற்றுவதில்லை. தீய சக்தி திமுகவிடம் இருந்து மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் 2ஜி ஊழல் ராஜா புரட்சி தலைவரை பற்றி இழிவாக பேசி இருக்கிறார் புரட்சி தலைவர் அவர்களும் புரட்சி தலைவி அம்மா அவர்களும் இன்றைக்கு நம் கூட இல்லா விட்டாலும் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் இருக்கிறார் அவர் உங்களை சும்மா விட மாட்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறாரோ அவரின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார். மேலும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
